March 16, 2017

வெண்பா

யாப்பருங்கலக்காரிகை 21ம் பாடல் பாவுக்குரிய அடியும் ஓசையும் வரையருக்கிறது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா எனப் பாக்கள் ஐவகைப்படும். யாப்பருங்கலக்காரிகை பாடல்கள் 23 – 27, வெண்பாவுக்கு ஆன விதிகளை வரையருக்கிறது. பாக்களில் வெண்பாவின் இலக்கணம் கட்டுப்பாடுகள் அதிகம் கொண்டது, இடம் சாரா இலக்கணம்என்று நிறுவப்பட்டுள்ளது. பாக்களில், வெண்பா செப்பலோசையை உடையதாக இருக்கும். ஈற்றடி (கடைசி அடி) முச்சீரும், ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும். வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது. மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும். Read more

May 16, 2016

வல்லினம் மிகும்/மிகா இடங்கள்

என்ற விதியின் படி நிலைமொழியில் இ, ஈ, ஐ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) உடம்படுமெய் தோன்றும். ஏ இருப்பின் ய் / வ் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும். என்ற விதியின் படி ய, ர, ழ என்னும் மூன்று மெய்களின் முன் மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும். மேலே குறிப்பிட்ட "மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்கள்" யாது என்பதையும் நன்னூல் (102) விலக்கி உள்ளது. பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல் பன்னிரண்டு உயிரெழுத்துக்கள் மற்றும் க ச த ந ப ம வ ய ஞ ங ஆகிய (ஈர் ஐந்து) பத்து உயிர்மெய் எழுத்துக்கள் மட்டுமே மொழிக்கு முதல் எழுத்தாக வரும். Read more

© Prakash P 2015 - 2023

Powered by Hugo & Kiss.