May 16, 2016
வல்லினம் மிகும்/மிகா இடங்கள்
என்ற விதியின் படி
நிலைமொழியில் இ, ஈ, ஐ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) உடம்படுமெய் தோன்றும். ஏ இருப்பின் ய் / வ் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும். என்ற விதியின் படி
ய, ர, ழ என்னும் மூன்று மெய்களின் முன் மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும். மேலே குறிப்பிட்ட "மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்கள்" யாது என்பதையும் நன்னூல் (102) விலக்கி உள்ளது. பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல் பன்னிரண்டு உயிரெழுத்துக்கள் மற்றும் க ச த ந ப ம வ ய ஞ ங ஆகிய (ஈர் ஐந்து) பத்து உயிர்மெய் எழுத்துக்கள் மட்டுமே மொழிக்கு முதல் எழுத்தாக வரும்.
Read more