May 8, 2016

அகநானூறு – 355

பாடல் - 355

மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும்
துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
செழுமனை மறக்கும் செவ்விவேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!
யாமே எமியம் ஆக நீயே
பொன்நயந்து அருள்இலை யாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.

உரை|Explanation:

மாமரம் நல்ல வலிமை மிக்க துளிர் விட்டுள்ளது,
குயில் மரக்கிளையின் மேல் இனிமையாக பாடிக்கொண்டிருக்கிறது,
மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்த்து, அதன் பெரிய கிளைகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன,
திறமையான ஒருவர் பாலை நிலத்தின் நரம்புக் கருவியை மீட்பது போல தேனிக்கள் மென்மையாக ரீங்கரிக்கிறது,
இந்த வெயில் காலத்தில், காதலர்கள் தங்கள் வசதியான வீட்டை மறந்து, தெளிவான நீரோடை அருகில் மணல் குன்று மற்றும் பூக்களின் மகரந்தம் ததும்பும் சோலையில் தங்கிவிடுவர்.

தோழியே, உன்னுடைய கைகளிலிருந்து நழுவும் மின்னும் வளையலை காண்பித்து தலைவனிடம் சொல், உன்னுடைய அன்பு இல்லாத பேராசையினால் நாம் இங்கு தனியாக இருக்கிறோம்; இது உனக்கு பொருத்தமானதா?.

Mango trees have produced strong sprouts,
Cuckoo is singing sweetly sitting on the tree branches,
Trees drops its autumn leaves and it’s big branches blossoming with flowers.
Bees are humming gently like a tune played on string instrument from desert(Pālai) land by a skilled musician,
In this summer, lovers will forget their affluent home and stay in the garden which are blooming with flowers which also contains sand dunes near the pond with clear water.

My dear friend, show your hand where the shining bangles slide down on its own to him and tell that, “Because of your greediness and desire for wealth we are alone here. Is this fitting of you?”.

சொல்லும் - பொருளும்:

மாவும் - மா மரம் | Mango Tree
வன்தளிர் (வன்மை + தளிர்) - வலிமை மிக்க துளிர் | Strong sprout
இன் - பெரும்பாலும் இனிமையை குறிக்கும் பெயர் உரிச்சொல்லாகவரும் | Sweet or pleasant (Always in compound)
தீம் - இனிமையான | Sweet
குரல் - இசை/சத்தம்/ஓசை | Music/Sound
கொம்பர் - மரக்கிளை | Tree branch
நுவல் - சொல்லுதல் | Saying
மூதிலை (முதுமை + இலை) - வயது முதிர்ந்த இலை | Old leaves
அவிழ் - மலர்தல் | flowering
சினைத்தல் - பூ அரும்புதல். | Flower blooming
வல்லோன் - நிபுணத்துவம் உடையவன் | Expert
நரம்பு - நரம்புக்கருவி, யாழ்முதலியன | String instruments
ஆர் - ஒலிக்க | Play sound
முரலும் - மெல்லிய ஒலி ஒலிக்கும் | Plays soft sound
துணி - தெளிவு | Clear
கயம் - ஊற்று / குளம் | Spring/Pond
துன்னு - நெருங்க | Get close by
எக்கர் - மணற்குன்று | Sand dune
தண்பொழில் - குளிர்ச்சியான சோலை/பூந்தோட்டம் | Pleasant garden
அல்கி - தங்கி | Stay
செழுமனை (செழுமை + மனை) - செழுமையான வீடு | Affluent House
செவ்விவேனில் - வெயில் காலம் | Summer
இலங்குவளை - மின்னும் வளையல் | Shining Bangles
நெகிழ்ந்த - விலகல்/வெளியேறுதல்/நீங்குதல் | Parting/Going away
எவ்வம் - துன்பம் | Sad/Sorrow
புலந்தனம் - வெறுத்தல் | Hate
சென்மோ - நாம் செல்லக்கடவோம் | Let’s go
எமியம் - தனிமையாக | Alone/Lonely
நயந்து - ஆசைப்படுதல் | Desire
அருள் இலையாகி - உலோபத்தனம் | Miserliness
ஒத்தன்றால் - ஒத்துபோவது அல்ல | Not matching

© Prakash P 2015 - 2021

Powered by Hugo & Kiss.