என்ற விதியின் படி
- நிலைமொழியில் இ, ஈ, ஐ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) உடம்படுமெய் தோன்றும்.
- பிற உயிர்கள் இருப்பின் (வ்) உடம்படுமெய் தோன்றும்.
- ஏ இருப்பின் ய் / வ் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.
என்ற விதியின் படி
- ய, ர, ழ என்னும் மூன்று மெய்களின் முன் மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும்.
மேலே குறிப்பிட்ட "மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்கள்" யாது என்பதையும் நன்னூல் (102) விலக்கி உள்ளது.
பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல்
பன்னிரண்டு உயிரெழுத்துக்கள் மற்றும் க ச த ந ப ம வ ய
ஞ ங ஆகிய (ஈர் ஐந்து) பத்து உயிர்மெய் எழுத்துக்கள் மட்டுமே மொழிக்கு முதல் எழுத்தாக வரும்.
சுட்டு மற்றும் வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன்
அ, இ என்பது சுட்டு எழுத்துகள்; எ, யா என்பது வினா எழுத்துகள். இவற்றின் முன்னும், இவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு; அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்னும் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று, அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.
வந்த, கண்ட, சொன்ன, வரும் என்பன போன்ற பெயரெச்சங்களோடு படி, ஆறு என்னும் சொற்கள் சேர்ந்து வரும் வினையெச்சச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.
ஓர் எழுத்துச் சொற்களின் முன்
கை, தீ, தை, பூ, மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.
எண்ணுப்பெயர்கள், எண்ணுப்பெயரடைகள் முன்
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன்வரும் வல்லினம் மிகுவதை நாம் கீழே காண்போம். ஏனைய ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்னும் மென்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஆறு, நூறு என்னும் நெடில் தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஏழு என்னும் முற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும், ஒன்பது என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும் வரும் வல்லினம் மிகாது.
ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்ணுப்பெயரடைகளின் முன்வரும் வல்லினம் மிகாது.
குற்றியலுகரச் சொற்கள் முன்
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், சில மென்தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், உயிர்த்தொடர் போன்ற அமைப்பை உடைய சில முற்றியலுகரச் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்
சில மென்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்
இவற்றை வல்லினம் மிகாமல் பாம்பு தோல், கன்று குட்டி என்று எழுதினால் பாம்பும் தோலும், கன்றும் குட்டியும் என்று பொருள்பட்டு உம்மைத் தொகைகள் ஆகிவிடும்.
சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்
முற்றியலுகரச் சொற்கள் முன்
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேலும், பிற மெய்களின் மேலும் ஏறிவருகின்ற உகரம் முற்றியலுகரம் எனப்படும். நடு, புது, பொது, பசு, திரு, தெரு, முழு, விழு என்னும் முற்றியலுகரச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.**
தனி நெட்டெழுத்தை அடுத்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினமெய் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வருகின்ற உகரமும் முற்றியலுகரம் ஆகும். இத்தகைய முற்றியலுகரச் சொற்கள் பெரும்பாலும் ‘வு’ என முடியும். இவற்றின் முன் வரும் வல்லினமும் மிகும்.
வேற்றுமைப் புணர்ச்சியில்
எடுத்துக்காட்டு:
இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து(தொக்கி) வந்தால் அது ‘வேற்றுமைத்தொகை’ எனப்படும்.
இரண்டாம் வேற்றுமை (ஐ) முன் வரும் வல்லினம் மிகும்
நான்காம் வேற்றுமை (கு) முன்வரும் வல்லினம் மிகும்
நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகு
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் இரண்டாம் வேற்றுமை உருபான ஐயும் அதன் பயனும் (விற்கும்/பிடிக்கும்) உடன்தொக்கி (சேர்ந்து மறைந்து) வரும் இடங்களில் வல்லினம் மிகும்.
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது
ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது
மூன்றாம் வேற்றுமையான ஒடு & ஓடு என உயிர் ஈறு கொண்டவை. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது
‘கொண்டு’ என்னும் சொல்லுருபும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளில் வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது
ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய இல் என்பதோடு இருந்து என்னும் சொல்லுருபும், இன் என்பதோடு நின்று என்னும் சொல்லுருபும் சேர்ந்தே நீக்கப் பொருளை உணர்த்துகின்றன. இவ்விரு உருபுகளின் முன்வரும் வல்லினமும் மிகாது
ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது என்னும் உருபின் முன் வரும் வல்லினம் மிகாது
‘உடைய’ என்னும் சொல்லுருபும், ஆறாம் வேற்றுமைக்கு உரிய உடைமைப் பொருளில் வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது
அல்வழிப் புணர்ச்சியில்
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளிஈர் எச்சம்முற்று இடைஉரி
தழுவு தொடர்அடுக்கு எனஈர் ஏழே
- நன்னூல் - 152
அல்வழிப் புணர்ச்சி பதினான்கு வகைப்படும்:
பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்
உவமைத் தொகையில் வரும் வல்லினம் மிகும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்
அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்
இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகும்
யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகும்
வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்
ஆக, ஆய், என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகும்
குறிப்புவினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும்
மகர இறுதி கெட்டு, உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகும்
வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது
வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.
உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது
எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகாது
விளித்தொடரில் வரும் வல்லினம் மிகாது
ஏவல் வினைமுற்று முன் வரும் வல்லினம் மிகாது
வியங்கோள் வினைமுற்று முன் வரும் வல்லினம் மிகாது\
தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது
குறிப்புப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகாது
எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது
ண்டு, ந்து, ன்று என முடியும் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன் வரும் வல்லினம் மிகாது
ய்து என முடியும் இடைத்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும் வரும் வல்லினம் மிகாது
உகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களுக்கு முன் வரும் வல்லினம் மிகாது
ஆ, ஓ என்னும் வினா எழுத்துகளை இறுதியிலே கொண்டு முடியும் சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் மிகாது
பல, சில என்னும் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது
இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடர்களில் வரும் வல்லினம் மிகாது
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் வந்தால் வல்லினம் மிகாது
மேலும் சில வல்லினம் மிகும் எடுத்துக்காட்டுகள்