May 8, 2016
அகநானூறு – 355
பாடல் - 355 மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும்
துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
செழுமனை மறக்கும் செவ்விவேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!
யாமே எமியம் ஆக நீயே
பொன்நயந்து அருள்இலை யாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.
உரை|Explanation: மாமரம் நல்ல வலிமை மிக்க துளிர் விட்டுள்ளது,
குயில் மரக்கிளையின் மேல் இனிமையாக பாடிக்கொண்டிருக்கிறது,
மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்த்து, அதன் பெரிய கிளைகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன,
Read more